ரணில் வேண்டாம் – ஐ.தே.க அமைச்சர்கள் கடிதம்

260 0

17 வருடங்களாக எதிர்கட்சியிலிருந்துவிட்டு 2004ம் ஆண்டில் கட்சி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பை வீணாக்கி ஐக்கிய தேசிய கட்சியை தாரைவார்த்த ரணில் விக்ரமசிங்க இரண்டாவது முறையாகவும் கட்சியையும் ஆதரவாளர்களையும் நிர்கதிக்குள்ளாக்கியிருப்பதாகவும் அவர் உடனடியாக பதவி விலகி பொருத்தமான ஒருவருக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் 42 பேர் இணைந்து கையொப்பமிட்ட கடிதம் நாளை கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹஷீமிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த கடிதத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் இரு அமைச்சர்கள் 4 பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கையெழுத்திட்டுள்ளதுடன் இன்று மாகாண சபை உறுப்பினர்களின் கையெழுத்துக்களும் பெறப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமாகவுள்ள பொதுச்செயலாளர் கபீர் ஹஷீம், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல போன்றோரை அருகில் வைத்துக்கொண்டு அரச நிதியை மோசடி செய்த ரணில் விக்ரமசிங்க wifi மற்றும் 10 இலட்சம் வேலை வாய்ய்பு என்று கூறி கட்சி ஆதரவாளர்களை திசை திருப்ப முயற்சிப்பதாகவும் இவற்றுக்கு மக்கள் தொடர்ந்தும் ஏமாற மாட்டார்கள் எனவும் கட்சியின் தலைமை பொறுப்பை சரியான ஒருவருக்கு வழங்கி அவர் பதவி விலக வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்படவுள்ளது.

Leave a comment