ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் வெற்றியை சமாதானமாக கொண்டாடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வட்டார ரீதியான தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணமுள்ள நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தோல்வியடைந்தவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தாமல் முன்மாதிரியாக வெற்றியை கொண்டாடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

