தேர்தல் முடிவுகள் நேரகாலத்துடன் அறிவிக்கப்படும் என முன்னர் தேர்தல் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டாலும் தற்பொழுது அதிகாலை இரண்டு மணியை கடந்த நிலையிலும் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் நிலவி வருகின்றது.
அதிகமான நிலையங்களில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டாலும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் மூலம் அவற்றை அறிவிக்கும் செயன்முறையில் தாமதம் நிலவுவதால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் நிலவுவதாக தேர்தல் ஆணையாளர் சற்றுமுன்னர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை ஒரு சில தெரிவித்தாட்சி அலுவலகர்களுக்கு தேர்தல் முடிவு அறிக்கையில் ஒரு அறிக்கை மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதால் முழு தேர்தல் முடிவுகளை தயாரிப்பதில் மீண்டும் மீண்டும் பரீட்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் முடிவுகளை வெளியிடுவதில் குறிப்பிடத்தக்க அளவு நேரம் எடுக்கும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தேர்தல் முடிவுகளை அறிவுக்கும் வரையில் பொறுமையாக இருக்குமாறு ஆணையாளர் தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

