நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நிறைவடைந்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மட் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்க்பபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள் மற்றும் மத்திய நிலையங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிகள் இன்னும் சில மத்திய நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உள்ளுராட்சி சபைகளின் வட்டார வாக்குகள் எண்ணப்பட்டு முதலில் அறிவிக்கப்படும். அதன்பின்னர் மாவட்டரீதியிலான வாக்குகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.

