தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், இன்றைய தினம் (10) இதுவரை 20 பேரை கைது செய்துள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது
காலி, பின்னதுவையில் வாக்களிக்கச் சென்ற பெண், தனது வாக்குச் சீட்டை கைபேசியில் படம் பிடித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஹக்மீமன பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
யாப்பஹூவ, மஹாவ பகுதியில் வாக்குச் சாவடிக்கு அருகாமையில் அனாவசியமாக சுற்றித் திரிந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 9ஆம் திகதி முதல் இன்று வரை தேர்தல் தொடர்பாக சுமார் 900 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அதன்பேரில் சுமார் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

