குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அருகருகே கண்டுகளித்த இரு துருவங்கள்

24170 0

குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவை வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் மற்றும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அருகருகே அமர்ந்து விழாவை கண்டுகளித்தனர்.

தென்கொரியாவில் இன்று தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வடகொரிய பாராளுமன்ற தலைவர் கிம் யாங் நம் தலைமையில் கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் ஆகியோர் குழுவாக இன்று சென்றிருந்தனர்.

பியூங்சங் நகரில் இன்று நடந்த தொடக்க விழாவில் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரும் கலந்து கொண்டனர். தொடக்க விழா மேடையில் கிம் யோ ஜாங் வந்த போது, தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் கை குலுக்கு வரவேற்றார்.

கிம் யோ ஜாங்-க்கு கை கொடுக்கும் மூன் ஜே-இன்

அதிகார்ப்பூர்வமாக ஒலிம்பிக் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டதும் வானவெடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அந்த காட்சியை கிம் யோ ஜாங்-கும், மைக் பென்ஸும் அருகருகே நின்று கண்டுகளித்தனர். இருந்தும் அவர்கள் எதுவும் பேசவில்லை.

இன்று இரவு தென்கொரிய அதிபர் அளிக்கும் இரவு விருந்தில் கிம் யோ ஜாங் பங்கேற்கும் நிலையில், மைக் பென்ஸ் அதனை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.