முன்னாள் ஜனாதிபதி மேலதிக செயலாளருக்கு பிணை

11914 0

ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்துக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்யும் போது 175 லட்சம் ரூபா அரச நிதியை மோசடி செய்ததாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மேலதிக செயலாளர் கே.டீ. குணரத்னவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று (08) உத்தரவிட்டுள்ளார்.

50 ஆயிரம் ரூபா நிதியும், 5 லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணைகள் இரண்டும் இவருக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது சந்தேக நபரான ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் கணக்காய்வாளர் எல்.ஜி. குணரத்னவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

Leave a comment