யாழில் தேர்தல் வாக்களிப்பிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

303 0

யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டள்ளதாக யாழ்மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்று நல்லிரவு முடிவுபெற்றன. தற்பொழுது அமைதியான முறையில் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் குறிப்பிடத்தக்க பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று அவர் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் 521 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களார்கள் வாக்களிப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் சுமார் 7 முதல் 8 அரச அதிகாரகிகள் கடமைகளில் ஈடுபடுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்காக 5 முறைப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் பொலிஸார் அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

Leave a comment