22 இந்திய மாலுமிகளுடன் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு!

239 0

மேற்கு ஆப்பிரிக்க கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் 22 இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல்நேற்று விடுவிக்கப்பட்டது.

மேற்கு ஆப்பிரிக்க பகுதியில் உள்ள கயானா வளைகுடா கடலில் ஜப்பானின் ஓசியன் டிரான்சிட் கேரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான கப்பல் 8.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பெட்ரோலுடன் சென்று கொண்டிருந்தது. பிப்ரவரி-1ல் முதல் அந்த கப்பலில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

பின்னர் அந்த கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது தெரியவந்தது. மாயமான கப்பலில் 22 இந்தியர்கள் பணியாற்றி வந்ததாகவும், அவர்களில் பலர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது. கப்பலை தேடும் பணியில் கடற்படை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், பிணைத்தொகை செலுத்திய பிறகு கடற்கொள்ளையர்கள் கப்பலை இன்று விடுவித்தனர். இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

Leave a comment