உதயங்கவை அழைத்துவர டுபாய் பயணமாகிறது விசேட குழு

7866 72

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அவரை இலங்கைக்கு அழைத்துவர விஷேட குழுவொன்று இன்று டுபாய் நோக்கி பயணிக்கவுள்ளது.

டுபாய் விமான நிலையத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க  கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதுடன் அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக 7 பேர் கொண்ட விஷேட குழுவொன்று டுபாய் நோக்கி இன்று பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment