அர்ஜூன மகேந்திரன் எந்த நாட்டில் இருந்தாலும் அவரினால் தப்பிக்க முடியாது!

350 0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் எந்த நாட்டில் இருந்தாலும் அவரினால் தப்பிக்க முடியாது. உதயங்க  வீரதுங்க போன்று அவரையும் கைது செய்ய முடியும். அத்துடன் பிணைமுறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர சபையில் தெரிவித்தார்.

அத்துடன் மத்திய வங்கி மோசடி விவகாரத்தில் நாடகம் அரங்கேற்றப்படுவதாக கூறப்படுகின்றது. இவ்வாறு கூறி ஜனாதிபதியை பலவீனப்படுத்த வேண்டாம். இது நாடக மல்ல. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பிரஜாவுரிமையை நீக்க நாம் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் தொடர் பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத் தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் சம்பந்தப் பட்டவர்களை தற்போது கைதுசெய்துள்ளோம். இந்த விடயத்தில் நான் பெருமைப்படுகின்றேன். ஏனெனில் நான் முதலில் இந்த மோசடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தேன். அப்போதும்  முறைப்பாடு செய்வதற்கு பலர் அஞ்சினர். எனினும் நான் அவ்வாறு இருக்காமல் முறைப்பாடு செய்தேன்.

மத்திய வங்கி மோசடி நடக்கவில்லை என்று எவராலும் கூற முடியாது. அது முற்றிலும் தவறாகும். இலங்கை வரலாற்றில் நடந்த பாரிய ஊழல் மோசடியே பிணைமுறி மோசடியாகும். இதனால் நாட்டின் பொரு ளாதாரம் மாத்திரமின்றி சர்வதேச உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் பாரதூரமான பாதிப்புகளுக்கு உள்ளாகினர். அதேபோன்று 2008 முதல் 2015 ஆம் ஆண்டும் வரைக்கும் இவ்வாறான மோசடி நடந்துள்ளது. எனவே இது தொடர்பிலும் நாம் விசாரிப்போம். இதற்காக தனி விவாதமொன்றையும் நடத்த நாம் தயாராக உள்ளோம் என்றார்.

இதன்போது குறுக்கிட்டு பேசிய உதய கம்மன்பில,

2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பிணைமுறி மோசடி தொடர்பில் ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பி டப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அந்த பக்கத்தை கூறுங் கள் என்றார்.

இதன்போது தனது உரையை தொடர்ந்த அமைச்சர் அமரவீர, உதய கம்மன்பில ஆரம்பத்தில் ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு எதிர்ப்பு வெளியிட்டார். அவர் எதிரணியினரா? அல்லது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளரா என்பது தெரியவில்லை. எவ்வாறாயினும் ஏனைய கோப்குழு அறிக்கையை போன்று மத்திய வங்கி மோசடி தொடர்பான அறிக்கையை நாம் குப்பைக்குள் போடவில்லை. இது தொடர்பில் உரிய விசாரணையை முன்னெடுத்தோம்.

நாம் ஒருபோதும் தனிநபரை இலக்குவைத்து இதனை முன்னெடுக்கவில்லை. இனிமேலும் இவ்வாறான மோச டிகள் நடக்கவிட முடியாது. மத்திய வங்கி மோசடி விவகாரத்தில் நாடகம் அரங்கேற்றப்படுவதாக கூறப்படு கின்றது. இவ்வாறு கூறி ஜனாதிபதியை பலவீனப் படுத்த வேண்டாம். இது நாடகமல்ல.

அத்துடன் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர் பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் கைது செய்யப்படவில்லை. அவர் தப்பித்து விட்டார் என கூறுகின்றார். அப்படி நடக்க நாம் விடமாட்டோம். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனால் தப்பிக்க முடியாது. உதயங்க  வீரதுங்க போன்று அவரையும் கைதுசெய்ய முடியும். அத்துடன் பிணைமுறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைதுசெய்வோம்.

நாம் நீதியை நிலைநாட்டும் போது பதவிகளை ஒரு போதும் பார்ப்பதில்லை. தராதரம் பாராமல் அனை வருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பிரஜாவுரிமையை நீக்க நாம் ஒத்துழை ப்பு வழங்கமாட்டோம் என்றார்.

Leave a comment