2363 இடங்­களில் மண்­ச­ரிவு அபாயம்

227 0

நாட்டில் பல்­வேறு பிர­தே­சங்­களில் மண்­ச­ரிவு அபா­ய­முள்ள 2363 இடங்கள்  அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தேசிய கட்­டட ஆராய்ச்சி நிறு­வனம் அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.

குறித்த அறிக்­கை­யின்­படி அதிக மண்­ச­ரிவு அபா­ய­முள்ள இடங்கள் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் காணப்­ப­டு­வ­துடன் அதன் எண்­ணிக்கை 393 ஆக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

மாத்­தறை மற்றும் அம்­பாந்­தோட்டை மாவட்­டங்­களில் 569 இடங்­களும், காலி மாவட்­டத்தில் 310, கேகாலை  மாவட்­டத்தில் 128,கொழும்பு தொடக்கம் கம்­பஹா வரை­யி­லான பகு­தி­களில் 44 இடங்­களும் அபாய வல­யத்தில் காணப்­ப­டு­வ­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதன்­படி அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள இடங்­களில் 6775 குடி­யி­ருப்­புக்கள் காணப்­ப­டு­வ­துடன் மக்­களை குடி­யி­ருப்­புக்­களில் இருந்து மீள்­கு­டிய­மர்த்தும் வேலைத்­திட்­டங்கள் தற்­போது இடம்­பெற்­று­வ­ரு­வ­துடன் இதற்­கான ஆரம்பகட்ட நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்­காக 295 மீள்குடியமர்த்தல் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆரா ய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment