ஹெரோயினுடன் 2 பொலிஸ் அதிகாரிகள் கைது

336 0

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கட்டுகஸ்தோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் குறித்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கம்பளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து 1 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை ஒரு வார காலம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment