சீனாவை சேர்ந்த 81 வயதான ஷியூமின்சூ `தியான்ஜின்’ பல்கலைக்கழகத்தில் இ-காமர்ஸ் படித்து டிப்ளமோ பட்டம் பெற்றார்.
கல்வி கற்க வயது தடையில்லை. அதை நிரூபிக்கும் வகையில் 81 வயது பெண் படித்து பட்டம் பெற்றுள்ளார்.
அவரது பெயர் ஷியூமின்சூ. சீனாவை சேர்ந்த இவர் தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் இ-காமர்ஸ் படித்து டிப்ளமோ பட்டம் பெற்றார்.
கடந்த 2014-ம் ஆண்டு தனது 77 வது வயதில் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனம் மூலம் இப்படிப்பை தொடங்கினார். கடந்த 4 ஆண்டுகளாக தீவிர முயற்சியின் மூலம் படித்து பட்டம் பெற்றுள்ளார்.
பட்டத்தை நேரில் சென்று ஷியூமின்சூ பெற்றுக் கொண்டார். அப்போது மாணவர் பிரதிநிதி சார்பில் பேச அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தார்.
படித்து பட்டம் பெற்றதன் மூலம் தனது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்து இருப்பதாகவும், தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் தீவிர முயற்சி செய்து படித்து பட்டம் பெற்றதாகவும் கூறினார்.

