பிணைமுறி சந்தேகநபர்கள் அர்ஜுன மஹேந்திரன், அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலியசேன !

372 0

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் என்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன், அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலியசேன ஆகிய மூவருமே சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்காகவே இவர்கள் மூவரும் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இவர்கள் மூவரும் சம்பவத்தின் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

அதேவேளை முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் கொழும்பு கேட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Leave a comment