கொழும்பு – கண்டி பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி

408 0

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஸ்யால பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதையின் குறுக்காக பயணம் செய்த இருவர் மீது மோட்டார் வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் வதுபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தவர் பஸ்யால, வீதாகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகன ஓட்டுனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment