இலங்கை தேயிலையின் தரம் குறித்து ஆராய்வதற்காக ரஷ்யாவில் இருந்து விசேட குழு ஒன்று இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி நான்கு பேர் கொண்ட இந்த குழு பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும் இந்த குழுவில் ரஷ்ய அரசாங்கத்தின் தாவர பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவின் விஜயத்தில் இலங்கையிலுள்ள துறைசார் அதிகாரிகளை சந்தித்து ரஷ்ய குழுவினர் கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என அமைச்சர் நவீன் திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

