மஹியங்கனையில் தாயொருவர் இரண்டு பிள்ளைகளை கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய் ஒருவரும் தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
எனினும் அவர்கள் ஆபத்தான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிசிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒன்று மற்றும் இரண்டரை வயது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் விஷமருந்தியுள்ளார்.மஹியங்கனை, கெமுனுபுர, பிரதேசத்தில் வாழும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரே இவ்வாறே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.

