வேகத்தினால் வந்த விபரீதம்!! வவுனியாவில் இளைஞன் கோர விபத்தில் பலி!!

328 0

வவுனியா, விநாயகபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுஇச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது;

நேற்றிரவு (25.01) மேசன் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அரபாத் நகர் பகுதியை சேர்ந்த சஜா என்கின்ற 28 வயதுடையஇளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானதாக அறியப்படுகிறது.சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்த விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment