தமிழரசுக் கட்சியை அழிக்க முயற்சி – மாவை(காணொளி)

486 0

தமிழரசுக் கட்சியை அழிக்க வேண்டும் அல்லது தோற்கடிக்க வேண்டும் என்ற கோசத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு, கட்சியொன்று உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றது என, தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகர சபையின், தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர் ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

தமது கட்சி, மக்களுக்கு என்ன சேவை செய்வார்கள் என்பதை விடுத்து, தமிழரசுக் கட்சியை தோற்கடிக்கின்ற விஞ்ஞாபனத்தை முன்னிறுத்தி தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும், இதே போன்று கடந்த தேர்தலிலும் இவ்வாறான கோரிக்கை முன்வைத்து செயற்பட்டனர் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

 

Leave a comment