இந்தியா செல்ல குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பம்!

577 0

இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையிலான விசேட விமான சேவையொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கி இன்று காலை 8.00 மணிக்கு வந்தடைந்துள்ளது.

“இன்டிகோ” என அழைக்கப்படும் இந்த விமான சேவை ஒரு நாளைக்கு மூன்று முறை இரு நாடுகளுக்கிடையில் போக்குவரத்தை வழங்கவுள்ளது. இந்தியாவின் சென்னை, பெங்களுர் ஆகிய நகர்களிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க நோக்கி இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது.

மிகவும் குறைந்த கட்டண விமான சேவையாக இது இருப்பதாக கூறப்படுகின்றது.

Leave a comment