சட்டவிரோத கேபிள் டிவி வழங்குனர்களுக்கு எதிராக முறைப்பாடு!

2 0

யாழ்ப்பாணத்தில் அரச அனுமதி பெறாமல் கேபிள் டிவி இணைப்புகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரச அனுமதி பெற்று கேபிள் டிவி இணைப்புகளை வழங்கும் ஏஎஸ்கே நிறுவனத்தால் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

அரச அனுமதி பெறாமல் கேபிள் டிவி இணைப்புகளை வழங்க கடந்த டிசெம்பர் 31ஆம் திகதியுடன் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் தடை விதிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக கேபிள் டிவி இணைப்புகளை வழங்கியவர்களின் வயர்கள் யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் அகற்றப்பட்டன.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பிலிருந்து வருகைதந்து அவற்றை அகற்றியிருந்தனர்.

இந்த நிலையில் தற்போதும் சட்டவிரோத கேபிள் இணைப்புகளை யாழ்ப்பாணத்திலுள்ள சில நிறுவனங்கள் முன்னெடுத்து வருவதாக குற்றஞ்சாட்டி ஏஎஸ்கே நிறுவனத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டது.

டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியே ஏஎஸ்கே நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை

Posted by - November 16, 2018 0
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (16) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். நாட்டின் வடக்கு பிரதேசத்தில் காணப்படுகின்ற சீரற்ற காலநிலை…

கிளிநொச்சியில் அவசர கலந்துரையாடல்

Posted by - December 22, 2018 0
சீரற்ற கால நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் இவற்றுக்கான உடனடித் தீர்வுகளையும் ,தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்டு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்…

யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்

Posted by - February 19, 2019 0
யாழ்.கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பாக செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று பகல்…

சிறப்புற நடைபெற்ற மடு அன்னையின் ஆடித் திருவிழா

Posted by - July 2, 2018 0
மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (02) கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு துணை ஆயர்…

முல்லைத்தீவில் பதற்றம் : கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு!!!

Posted by - August 2, 2018 0
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன் பிடித் தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி மீனவர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.முல்லைத்தீவு…

Leave a comment

Your email address will not be published.