யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரைகள் மீள ஆரம்பம்

333 0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக குறித்த மாணவர்களுக்கு கடந்த வாரம் வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களுக்கு நுழைவதற்காக விதிக்கப்பட்ட பொதுவான தடை உடனடியாக செயற்படும் வண்ணம் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்தார்.

18.01.2018 ஆம் திகதி (வியாழக்கிழமை) இலிருந்து அனைத்து விரிவுரைகளும் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

Leave a comment