பிரதேச செயலாளர் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல்: ஒருவர் கைது

263 0

அகுரஸ்ஸ பிரதேச செயலாளர் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அகுரஸ்ஸ – ஹேனகம பகுதியில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிந்த போதே, பிரதேச செயலாளர் மற்றும் அவர் பயணித்த கெப் வாகனத்திற்கும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதனால் இரு கெப் வாகனங்களில் பயணித்த இரு சாரதிகளும் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் தற்போது அகுரஸ்ஸ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர்களுல் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, மற்றையவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment