
யேர்மனியில் டுசில்டோர்ப் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் தைப்பொங்கல் நிகழ்வு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் மண்டபத்தின் முன் தோறணங்கள் கட்டிக் கோலமிட்டு மண்பானையில் பொங்கல் பொங்கப்பட்டது. பின்பு சிறுவர்களின் பட்டிமன்றம் மற்றும் நடனங்கள் பேச்சு, மற்றும் விடுதலைக் கீதங்களும் இசைக்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.














































