தூய்மையான அரசாங்கம் ஒன்றையும் தூய்மையான நாட்டையும் அரசாங்கத்தையும் கட்டியெழுப்புவேன்!

210 0

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் தூய்மையான கட்சியை மட்டுமன்றி தூய்மையான அரசாங்கம் ஒன்றையும் தூய்மையான நாட்டையும் கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

அத்துடன் மிஹின் லங்கா மற்றும்  ஸ்ரீலங்கா  எயார்லைன்ஸ் மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்கு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டால் பல்வேறு தகவல்கள் வௌிவரும் என்பதுடன், மேலும் ஊழல் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களும் வௌியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விடயங்கள் அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்படப்பட்டுள்ளது.

அதேவேளை தனது பதவிக் காலம் குறித்து உயர் நீதிமன்றத்திடம் கருத்துக் கோரியமை தொடர்பில் எவரும் பதட்டப்படத் தேவையில்லை என்று கூறியுள்ள ஜனாதிபதி நாளையல்ல இன்றே பதவி விலக தான் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்மானத்தையும் கௌரவத்துடன் ஏற்று ஜனநாயகத்திற்கு தலைசாய்ப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அகுரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

Leave a comment