அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் வெறும் மாயை – ரோஹித அபேகுணவர்தன

203 0

அரசாங்கம் அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் என்ற பேரில் வெறும் மாயை ஒன்றையே ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

ஜனாதிபதி 6 வருடங்கள் பதவி வகிக்க முடியுமாக இருந்தால் அவர் பாராளுமன்றத்தை கலைக்கும் கால எல்லையை ஒரு வருடமாக குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் மதுபானசாலைகளை திறக்கும் நேரங்களில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. மதுபான சாலைகள் திறந்திருக்கும் நேரத்தை ஒரு மணிநேரத்தினால் அதிகரித்துள்ளனர்.

நாட்டில் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவசியமற்ற தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கிறது. எனவே மக்களை போதையில் ஆழ்த்திவிட்டு அரசாங்கம் தமது சுய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment