ஸ்ரீ ஜயவர்தனபுர தாதியர் வேலைநிறுத்தம் இன்று முடிவுக்கு

209 0

கைவிரல் பதிவு அடையாள இயந்திரப் பயன்பாட்டுக்கு எதிராக  ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு  வந்த தாதியர்களின் வேலைநிறுத்தம் இன்று(12)  முடிவுக்கு வந்துள்ளது.

வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து இந்த வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது.

நாளாந்தம் பணிக்கு வரும் நேரத்தை பதிவுசெய்வதற்கு கைவிரல் அடையாள பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுத்துவதற்கு வைத்தியசாலை நிருவாக மேற்கொண்டு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலைநிறுத்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

கைவிரல் அடையாள பதிவுமுறை அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் அதனை நிறுத்துவதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்று வைத்தியசாலை அதிகாரிகள் ஏற்கனவே  தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, இன்று காலை வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற சந்திப்பில், சாதாரண முறையில் கையொப்பமிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிடுவதற்கு தீர்மானித்ததாக அகில இலங்கை தாதியர் சங்க தேசிய அமைப்பாளர் எச்.எம்.எஸ்.பீ. மதிவத்த தெரிவித்துள்ளார்.

Leave a comment