கோட்டாவுக்கு அழைப்பாணை

319 0

image_handleஅவன்ற்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட எண்மரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலபிட்டிய இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதன்படி அவர்கள் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.

மிகக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்காக, அவன்ற்காட் மெரிடைம் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டதன் ஊடாக 11.4 பில்லியன் ரூபாய் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணை இன்று இடம்பெற்ற போது இந்த உத்தரவிடப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ, அவன்ற்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சுஜாதா தமயந்தி ஜெயரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதிகளான அத்மிரல் சோமதிலக திஸாநாயக்க, அத்மிரால் ஜயனத் கொலம்பகே, அத்மிரால் ஜயந்த பெரேரா மற்றும் இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல்கள் இருவருக்கும் இவ்வாறு நீதிமன்றம் அழைப்புவிடுத்துள்ளது.

அவர்களுக்கு எதிராக 19 குற்றச்சாட்டுகளின் கீழ், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்கு பதிவு செய்துள்ளது.

அத்துடன் அதனை உறுதிப்படுத்துவதற்காக 60 சாட்சிகளையும், 218 வழக்கு ஆவணங்களையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.