அரச ஊடகங்களின் முக்கியஸ்தர்கள் – தேர்தல் ஆணையாளர் பேச்சுவார்த்தை

216 0

அரச ஊடகங்களின் முக்கியஸ்தர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளருக்கிடையிலான சந்திப்பொன்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல் செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேவேளை தேர்தல் வழிகாட்டல்களை உரிய வகையில் பின்பற்றுவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் செயற்படவேண்டும் எனவும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் குறித்த கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த அரசாங்க தகவல் திணக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment