சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்குச் சென்ற 25 பேர் சட்டவிரோத போதை பொருட்களை வைத்திருந்த காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நாட்களில் ஹட்டன் மற்றும் நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புக்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு பலர் வருகின்ற காரணத்தினால் இனிவரும் காலங்களில் சோதணைக்குட்படுத்தப்பட்டதன் பின்னரேயே அனுமதிக்கவுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

