அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கை விசாரிக்க தடையில்லை

342 0

201609011447163820_delhi-high-court-order-for-not-ban-case-probe-on-anbumani_SECVPFமருத்துவ கல்லூரி முறைகேட்டில் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கை விசாரிக்க தடையில்லை என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ். இவர் 2004-2009-ம் ஆண்டு வரை மத்திய சுகாதார துறை மந்திரியாக பதவி வகித்தார்.
மத்திய சுகாதார துறை மந்திரியாக அன்புமணி ராமதாஸ் இருந்த போது உத்தரபிரதேசத்தில் உள்ள ரோஹில்கந்த் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவ கல்லூரி ஆகியவற்றுக்கு முறைகேடாக அனுமதி அளித்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக அவர் உள்பட 10 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், தன் மீதான குற்றச்சாட்டு பிரிவுகளை மாற்ற கோரியும் அன்புமணி ராமதாஸ் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. அன்புமணி மீதான வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டு அவரது கோரிக்கையை நிராகரித்தது. டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு இந்த வழக்கை விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டது.