சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

354 0

201609011427582911_release-draft-voter-list-in-Chennai_SECVPFசென்னை மாவட்டத்தினை உள்ளடக்கிய 16 தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.  சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கமி‌ஷனர் கார்த்தியேன் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
பின்னர் கமி‌ஷனர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-1.1.2017 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2017-ம் ஆண்டின் சிறப்பு திருத்த முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலங்கள், 4, 5, 6, 7, 8, 9, 10, மற்றும் 13 வாக்கு சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் பெயர்கள் மற்றும் குடும்பத்தினர் பெயர்கள் குறித்த விவரங்கள் அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளதா? என்று சரி பார்த்து கொள்ளலாம்.மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2017 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் (1.1.1998-தேதிக்கு முன் பிறந்தவர்கள்) படிவம்-6யை பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் செய்ய படிவம்-7யை பூர்த்தி செய்தும், திருத்தம் செய்ய விரும்புபவர்கள் படிவம்-8யை பூர்த்தி செய்தும் சமர்ப்பிக்க வேண்டும்.

சட்டமன்ற தொகுதிக்கு உள்ளே ஒரு இடத்தில் இதற்கு மற்றொரு இடத்தக்கு குடிபெயர்ந்து புதிய இடத்தில் வசிப்பவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விரும்பினால் படிவம்-8ஏயை பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகலின் இணைத்தும் சம்பந்தபபட்ட அலுவலகத்தில் இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் புததாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்காக வருகிற 11 மற்றும் 25-ந்தேதிகளில் வாக்கு சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் இணைய தளம் மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கும், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 87 ஆயிரத்து 359 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 72 ஆயிரத்து 641 பேர் பெண் வாக்காளர்கள். 20 லட்சத்து 13 ஆயிரத்து 768 பேர் இதர வாக்காளர்கள். 950 பேர் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 41 ஆயிரத்து 127 பேர் அதிகமாகும்.

29.4.2016 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 39 லட்சத்து 75 ஆயிரத்து 28 ஆகும்.தற்போது 12 ஆயிரத்து 331 வாக்காளர்கள் அதிகரித்து உள்ளது. குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியாக துறைமுகம் உள்ளது. அங்கு 1 லட்சத்து 88 ஆயிரத்து 571 வாக்காளர் உள்ளனர்.

அதிக வாக்காளர்கள் தொகுதியாக வேளச்சேரி தொகுதி உள்ளது. அங்கு 3 லட்சத்து ஆயிரத்து 977 வாக்காளர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.வரைவு வாககாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க. வடசென்னை மாவட்ட செயலாளர் பாலகங்கா, பகுதி செயலாளர் ராமஜெயம், தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் மயிலை வேலு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் காத்தே தியாகராஜன், ரவி, சூளை ராஜேந்திரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் செந்தாமரைக் கண்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொணடனர்.