வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் தீ

377 0
வலஸ்முல்லை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அங்கிருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் மின்சார சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியான முறையில் தெரியவரவில்லை.

குறித்த வைத்தியசாலையின் குளிரூட்டியில் இருந்தே தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை, வலஸ்முல்லை வைத்தியசாலையின் மருந்தகம் சேதமடைந்துள்ளமையால், ஹம்பாந்தோட்டை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து குறித்த வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகள் விநியோகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

Leave a comment