பான் கீ மூன் மன்னிப்புக் கோரவேண்டும்

293 0

ban-ki_moon6இறுதிக்கட்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது, அதனை தடுத்து நிறுத்த தவறியமைக்காக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மன்னிப்புக் கோரவேண்டுமென சமாதானம் மற்றும் நீதிக்கான பிரசார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது, அதனை தடுத்து நிறுத்த தவறியமைக்காக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மன்னிப்புக் கோரவேண்டுமென சமாதானம் மற்றும் நீதிக்கான பிரசார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு குறித்த அமைப்பின் இயக்குநர் பிரட்கார்வெர் எழுதியுள்ள பகிரங்க கடிதத்திலேயே இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐ.நா தம் கடமையை நிறைவேற்ற தவறிவிட்டதென பான் கீ மூனே தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ள பிரட்கார்வெர், தற்போது அதற்காக மன்னிப்புக் கோருவதானது ஐ.நாவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகளே இலங்கையில் தென்படுகின்றன என தெரிவித்துள்ள அவர், இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் ஐ.நா செயலாளர் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு, இலங்கையில் நிறுவப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் குறித்து பாதிக்கப்பட்ட மக்களுடன் மிகக் குறைவான கலந்துரையாடல்களே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவம் சுட்டிக்காட்டியள்ளார். அத்தோடு,போர்ககுற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவை குறித்து தமது வெளிப்படையான கருத்தை தெரிவிக்க வேண்டுமென சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கைக்கான பிரசார அமைப்பின் இயக்குநர் பிரட்கார்வெர் கேட்டுக்கொண்டுள்ளார்