ஜிம்பாப்வே நாட்டின் துணைஅதிபராக கான்ஸ்டான்டினோ சிவேங்கா பதவியேற்றார்

352 0
ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேவின் துணைஅதிபராக முன்னாள் ராணுவ ஜெனரல் கான்ஸ்டான்டினோ சிவேங்கா நேற்று பதவியேற்றார்.

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வந்தார். ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, முகாபேவின் 37 ஆண்டுகால ஆட்சிக்கு ராணுவ புரட்சி மூலம் முடிவு கட்டினார்.
இதையடுத்து முகாபேவால் நீக்கப்பட்ட முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நாங்காவா, அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்.
இந்நிலையில், முகாபேவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த முன்னாள் ராணுவ ஜெனரல் கான்ஸ்டான்டினோ சிவேங்கா, ஜிம்பாப்வேயின் புதிய துணைஅதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி பதவியேற்றார்.

Leave a comment