எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கீழ் படுக்கை, ஜன்னலோர இருக்கைக்கு கூடுதல் கட்டணம்?

476 0

நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கீழ் படுக்கை, ஜன்னலோர இருக்கைக்கு கூடுதலாக ரூ.50 கட்டணம் வநீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கீழ் படுக்கை, ஜன்னலோர இருக்கைக்கு கூடுதலாக ரூ.50 கட்டணம் வசூலிக்க ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.சூலிக்க ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ரெயில்வேயின் வருவாயை அதிகரிப்பதற்காக மத்திய ரெயில்வே இலாகா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு பயணிகளின் நெரிசலை சமாளிப்பதற்காக சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயில்களை அறிமுகம் செய்தனர்.

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயிக்கும் முறையை அப்போது கொண்டு வந்தனர். விடுமுறை காலங்களில் அதிகளவு மக்கள் வெளியூர்களுக்கு செல்வார்கள் என்பதால் கட்டணத்தை அதற்கேற்ப உயர்த்தும் திட்டமும் நடைமுறையில் உள்ளது.

அதன்படி முதல் 30 சதவீத டிக்கெட்டுகள் வழக்கமான கட்டணத்தில் வழங்கப்படுகிறது. அதன்பிறகு பயணிகளின் வருகைக்கேற்ப ஒவ்வொரு 10 சதவீத டிக்கெட்டும், அடுத்தடுத்த 10 சதவீத கட்டண உயர்வுடன் வசூலிக்கப்படுகிறது.

சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளன. குறிப்பாக முதல் வகுப்பு டிக்கெட் கட்டணம் சில சமயம் விமான கட்டணத்தையும் மிஞ்சும் அளவுக்கு இருப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். என்றாலும் மத்திய அரசு சுவிதா ரெயில்களின் கட்டண உயர்வை இன்னமும் ஒழுங்குப்படுத்தவில்லை.

இந்த நிலையில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கட்டணத்தை உயர்த்த ரெயில்வே இலாகா ஆலோசித்து வருகிறது. ரெயில்களில் ஜன்னலோர இருக்கைக்கும், கீழ் படுக்கைக்கும் அதிகப் போட்டி காணப்படும்.

இந்த போட்டியை கருத்தில் கொண்டு ஜன்னலோர இருக்கைக்கும், கீழ் படுக்கைக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஜன்னலோர இருக்கைகளுக்கு பயணிகள் கூடுதலாக ரூ.50 வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும் என்று தெரிகிறது.மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

Leave a comment