வில்பத்து குடியேற்றம் – மனு ஒத்திவைப்பு

433 0

வில்பத்துவில்பத்து வனப்பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி, சூழல் பாதுகாப்பு அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த மனுவில் அமைச்சர் றிசாட் பதியுதீன் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மனுவுக்கு எதிராக, பிரதிவாதி சார்பில் அவரது சட்டத்தரணியால் எதிர்ப்பு மனு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மனுவில் பெயரிடப்பட்டுள்ள மற்றொரு பிரதிவாத தரப்பான மத்திய சுற்றாடல் அதிகாரசபை, தமது எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டது.

அமைச்சர் றிசாட் பதியுதீன் உள்ளிட்ட எட்டு பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக சுட்டுடிக்காட்டப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு அடுத்த மாதம் 30ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.