த.தே.கூவில் இருந்து விலகும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

214 0
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படப் போவதாகவும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் சுயேட்சையாகவோ அல்லது வேறு தமிழ் கட்சிகளுடனோ இணைந்து செயற்படவுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான வெள்ளிமலை என அழைக்கப்படும் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சிக்காக 1965ம் ஆண்டில் இருந்து ஒரு தொண்டனாக சேவையாற்றி வந்ததாகவும் இன்று தன்னை அந்த கட்சி புறந்தள்ளி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்காக உழைத்தவர்கள் புறந்தள்ளப்பட்டு பணம் படைத்தவர்களுக்கும் மண் கொள்ளையர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பாமர மக்களை கருவேப்பிலை போல் பயன்படுத்திவிட்டு பணம் படைத்தவர்களையும் கல்விமான்களையும் வளப்படுத்துவது பொறுத்தமற்றது என்பதுடன் வாக்களித்த மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் உள்ள தனது வீட்டில் நேற்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே, ஞா.கிருஸ்ணபிள்ளை மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

 

Leave a comment