பண்டிகைக் காலத்தில் மக்கள் சுமையைக் குறைக்க ரணில் திட்டம்

202 0

தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் ‘நியாய விலைக் கடை’களை நிறுவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் அதைத் தவிர்க்கும் வகையிலேயே இந்தக் கடைகள் நிறுவப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ‘சிக்கனப் பொதி’கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரியவருகிறது.

இந்தப் பொதியில், அரிசி, பருப்பு, சீனி, கருவாடு, வெங்காயம், கிழங்கு மற்றும் டின் மீன் என்பன அடங்கவுள்ளன.

இந்த நியாய விலைக் கடை முறைமை தனியார் சிறப்பு அங்காடிகள் மற்றும் லக் சதொச விற்பனைக் கூடங்களிலும் இயக்கப்படவுள்ளன.

Leave a comment