சியம்பலாண்டுவ நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிச் சென்ற இரு கைதிகளில் ஒருவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 7ம் திகதி சியம்பலாண்டுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டு பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே குறித்த இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஹொரண பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மற்றையவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

