ஹிக்கடுவயில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்

234 0

ஹிக்கடுவ, தொடந்துவ – கோனபீனுவல வீதி, ஹேன்னதொட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து, காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

Leave a comment