Home / கட்டுரை / 2017 மாவீரர் நாள்! தளத்திலும் புலத்திலும் ….

2017 மாவீரர் நாள்! தளத்திலும் புலத்திலும் ….

கார்த்­திகை 27 ஈழத் தமி­ழர் வர­லாற்­றில் கண்­ணீ­ரால் பொறிக்­கப்­பட்ட நாள். ஈழ விடு­த­லைப் போராட்­டத்­தில் தம்மை அர்ப்­ப­ணித்த மாவீ­ரர்­களை நினைவு கூர்­வ­தும் அவர்­க­ளுக்கு அஞ்­சலி செய்­வ­தும், மட்­டு­மன்றி, தமிழ் மக்­க­ளின் தேசி­யக் கன­வின் நாய­க­னாக வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னின் பிறந்த தின­மான கார்த்­திகை 26ஆம் நாளை மன­தில் இருத்தி மதிப்­ப­ளிக்­கும் காலத்­தால் அழி க்க முடி­யாத வர­லாற்­றுப் பதி­வு­கள் அவை.

அந்த வகை­யில் இந்த அஞ்­சலி நிகழ்­வு­கள் இம்முறை ஈழத்­தில் தமிழ் மக்­க­ளின் வாழ்­வி­டங்­க­ளான வடக்கு கிழக்­கில் மிக­வும் உணர் வெ­ழுச்­சி­யு­டன் கடைக்­கொள்­ளப்­பட்­டன. வடக்கு கிழக்­கில் கார்த்­திகை மாதத்­தில் மாவீ­ரர் வாரத்­து­டன் மரம் நடுகை வார­மும் இயற்­கை­யின் பால் கொண்ட அக்­க­றை­யு­டன் வெயில் உஷ்ணம் தணித்து நிழல்­த­ரும் நிலை­யில் நாட்­டப் படு­தல் உயிர்­க­ளின் உயிர்ப்­பின் உன்­ன­த­மா­ன­தோர் அம்­ச­மா­கக் கொள்ள முடி­யும்.

ஈழத்­தில் 2009 ஆம் ஆண்டு தொடக்­கம் கடந்த வருடம்வரை மிகுந்த கெடு­பி­டி­க­ளுக்கு மத்­தி­யில், அதி­கார வர்க்­கங்­க­ளின் கண்­க­ளுக்கு தெரி­யாத வகை­யில் ஒழித்து மறைத்து தங்­கள் ஆத்ம விடு­தலை உணர்வை வெளிப்­ப­டுத்­திக் கொண்ட தமிழ் மக்­கள், இவ்­வ­ரு­டம் தாய­கம் எங்­கும் மிக வெளிப்­ப­டை­யாக தமிழ்த் தேசிய உணர்வை வெளிக்­காட்­டி­யது மட்­டு­மன்றி, தத்தமது மனங்களையும் ஆற்­றுப் படுத்­திக்க கொண்­ட­னர்.

தமி­ழர் தாய­கத்­தில் மாவீ­ரர் துயி­லும்
இல்­லங்­கள் மாவீ­ரர் நாளுக்­கா­கத்
தயார்ப்­ப­டுத்­தப்­பட்­டன

இரா­ணு­வத்­தி­னால் அடை­யா­ள­மின்றி அழிக்­கப்­பட் ட துயி­லும் இல்ல சுற்­றா­டல்­க­ளில் மாவீரர் நாளுக்கு ஒரு வார காலம் முன்பே துப்­ப­ர­வுப் பணி­கள் இடம்­பெற்­ற­து­டன் அவை சிவப்பு மஞ்­சள் நிறக் கொடி­க­ளி­னால் அலங்­க­ரிக்­கப்­பட்டு, எழுச்­சிப்­ப­டுத்­தப்பட்­டன.

புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரின் கண்­கா­ணிப்­புக்­க­ளுக்கு மத்­தி­யி­லும் யாழ்ப்­பா­ணம், கோப்­பாய், நல்­லூர், வவு­னியா குடி­யி­ருப்பு, யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கம், முழங்­கா­வில், தீவ­கம், சாட்டி, முள்ளிவாய்க்­கால், தோரா­வில், வன்னிவிளங்­குளம், கன­க­பு­ரம் வவு­னியா வளா­கம், மாங்­கு­ளம், முல்­லைத்­தீவு ஆகிய இடங்­க­ளி­லும் மட்­டக்­க­ளப்பு அம்­பாறை ஆகிய இடங்­க­ளி­லும், மஞ்­சள் சிவப்பு வர்ணக் கொடி­க­ளால் துயி­லும் இல்­லங்­கள் அலங்­க­ரிக்­கப்­பட்டு மாவீ­ரர்­க­ளின் புகைப் படங்­கள் அஞ்­ச­லிக்காக வைக்கப்பட்டன. முன்­னாள் போரா­ளி­கள் மற்றும் மாவீ­ரர்­க­ளின் குடும் பங்­கள் நிகழ்வை ஒழுங்­க­மைத்­த­னர், அர­சி­யல் தலை­மை­க­ளை­யும், அர­சி­யல்வாதி­க­ளை­யும் மக்­கள் புறக்­க­ணித்­த­ னர் . தங்­கள் பிள்­ளை­கள் எங்கு விதைக்­கப்­பட்­ட­னரோ, அங்கு சென்று அவர்­க­ளது பெற்­றோர்­கள் அஞ்­சலி செய்து ஆறு­தல் கொண்­ட­னர். அந்த வகை­யில், தமி­ழர் தாய­கத்­தில் உணர்ச்சி பூர்­வ­மா­க­வும்.

தமிழர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய மாவீரர் தின நிகழ்வுகள்
மாவீ­ரர்­க­ளின் பெற்­றோர்­க­ளால் பொதுச் சுடர் ஏற்­றப்பட்டு ,மலர்­மா­லை­கள் சூட்­டப்­பட்­டும் மலர் தூவி அஞ்­சலி செய்­யப்­பட்­ட­து­டன், தாய­கப் பாட­லும் இசைக்­கப் பட்­டது.சந்­தன பேழை­க­ளின் பாடல் வரி­கள் மக்­களை உணர்­வெ­ளிச்­சிப் படுத்­தி­ய­து­டன் அவர்­க­ளின் உள்­ளக் கிடைக்­கை­களை வெளிப்­ப­டுத்தி கொட்­டித் தீர்த்து மன­ஆ­று­தல்­பட வாய்ப்பை வழங்­கி­யது. ஈழ அரங்­கில் சடங்­க­ரங்­கின் பணியை இந்­தத் தினம் பூர­ண­மாக உள்­வாங்­கிக் கொண்­டது என்­றால் அது மிகை­யல்ல.

புலம்­பெ­யர் ஈழத் தமி­ழர்­கள் 2009ஆம் ஆண்டு முதல் தொடர்ச்­சி­யாக மாவீ­ரர் வாரங்களில் மாவீ­ரர்­களை நினைவு கூர்ந்து வரு­கின்­ற­னர். புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்­கள் 2009ஆம் ஆண்­டுக்­குப் பின்­ன­ரும் பன்­னாட்டு ரீதி­யில் மாவீ­ரர் தின நிகழ்­வு­க­ளைத் தொடர்ச்­சி­யா­கக் கடைப்பிடித்து வரு­கின்­ற­னர். ஈழத்­தில் உணர்ச்சி பூர்­வ­மா­க­வும், எழுச்சி பூர்­வ­மா­க­ வும் கடைக்­கொள்­ளப்­பட்டு வரும் வீரர் தின நிகழ்­வு­கள், புலம்­பெ­யர் நாடு­க­ளிலும் பேரெழுச்சியுடன் இடம் பெற்று வரு­கின்­றன.

அந்­த­வ­கை­யில் லண்­டன், ஆஸ்­தி­ரே­லியா, சுவிஸ் , ஸ்கொட்­லாந்து, பிரான்ஸ், நோர்வே, இத்­தாலி, ஜேர்­மன் மற்­றும் பின்­லாந்து ஆகிய இடங்­க­ளி­லும் இந்­தி­யா­வில் சென்னை, புதுச்­சேரி, கிருஷ்­ண­கிரி, இரா­ம­நாத புரம் ஆகிய இடங்­க­ளி­லும் மாவீரர் நாள் எழுச்சிபூர்­வ­மாகக் கடைப்பிடிக்கப்பட்­ட­து­டன் விளையாட்­டுப் போட்டி, கலை,கலா­சார நிகழ்வுகளும், பரி­ச­ளிப்பு நிகழ்­வு­க­ளும் . மிகப் பிர­மாண்­ட மான முறை­யில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. தமிழ் மக்­க­ளின் வாழ்­வில் மறக்­க­வும் மாற்­ற­வும் முடி­யாத வர­லாற்­றின் வாழ்­வி­யல் நாள் கார்த்­திகை 27.

லண்­ட­னில் ‘எக்­ஸல்’ மண்­ட­பத்­தில் இடம்­பெற்ற மாவீ­ரர் தின நிகழ்­வில் தமி­ழீழ தேசிய சின்­னங்­க­ளைத் தாங்­கிய தபால் தலை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. எமது தேசிய அடை­யா­ளங்­களை தடை செய்து அவற்றை நாட்டு மக்­கள் மனங்­க­ளில் இருந்து நீக்­கும் இலங்கை அர­சின் சதியை முறி­ய­டிக்­கும் நோக்­கில், இந்­தத் தபால் தலை வெளி­யி­டப் பட்­ட­தாக லண்­டன் இளை­யோர் அமைப்­பி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

இத்­தா­லி­யில் கோல்­டன் மண்­ட­பத்­தில் இடம்­பெற்ற நிகழ்­வில் அஞ்­சலி நிகழ்­வு­க­ளைத் தொடர்ந்து கலை நிகழ்­வு­ க­ளு­டன், கலை இலக்­கிய போட்­டி­க­ளுக்­கான பரி­ச­ளிப்­பும் இடம் பெற்­றன. ஸ்கொட்­லாந்­தில் இடம்­பெற்ற நிகழ்­வில் அஞ்­சலி நிகழ்­வு­க­ளு­டன் விசேட உரை­க­ளும் ஜேர்­மனி டோன் மூன் நக­ரில் இடம்பெற்ற நிகழ்­வில் அஞ்­சலி நிகழ்­வு­க­ளு­டன் எழுச்­சிப் பாடல்­க­ளும் நட­னங்­க­ளும், இடம் பெற்­ற­து­டன் ஜேர்­ம­ன் நாட்டவர்களும் கூட அஞ்­சலி நிகழ்­வில் கலந்து கொண்டு மல­ரஞ்­சலி செலுத்­தி­னார்­கள்.

தமிழர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய மாவீரர் தின நிகழ்வுகள் நெதர்­லாந்­தில்  இடம்­பெற்ற நிகழ்­வில் ஈகைச் சுடர் ஏற்றி அஞ்­சலி செய்­யப்­பட்­ட­து­டன் தமி­ழ­மு­தம் இசைக்­கு­ழு­வி­ன­ரின் எழுச்சி கானங்­கள், நட­னங்­கள், கவி­தை­கள், மற்­றும் சிறப்­பு­ரை­கள் என்­ப­ன­வும் இடம் பெற்­றன. அத்­துடன் தேசிய நாள் விளை­யாட்­டுப் போட்­டி­யும் போட்­டி­யில் வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்கு பரி­சில் வழங்­கு­த­லும் இடம் பெற்­றன.

சுவிட்­சர்­லாந்­தில், சுவிஸ் கிளைப் பொறுப்­பா­ளர் ரகு­பதி தலை­மை­யில் இடம்­பெற்ற மாவீ­ரர் தின நிகழ்­வில் எழுச்­சிப் பாடல்­கள், கவி­ய­ரங்­கம், காலை கலா­சார நிகழ்­வு­க­ளு­டன் தமிழ் நாட்­டைச் சேர்ந்த மே 17 இயக்­கத் தலை­வர் திரு­மு­ரு­கன் காந்­தி­யின் விசேட உரை­யும் , பிரான்ஸ் ஸ்ராஸ்­பூர்க் நக­ரில் மண்­ட­பம் நிறைந்த மக்­கள் எழுச்­சி­யு­டன் , மாதி­ரிக் கல்­ல­றை­க­ளுக்கு மலர் தூவி அஞ்­சலி செய்­யும் நிகழ்வு இடம்­பெற்­றது. மண்­ட­பம் நிறைய நடு கற்­கள் வைக்­கப் பட்டு சிவப்பு , மஞ்­சள் நிறப் பூக்களின் அலங்­கா­ரங்­க­ளி­னால் எழுச்சி நிறைந்­தி­ருந்­தது. . மாவீ­ரர்­க­ளின் பெற்­றோர்­கள் மதிப்புறுத் தப்பட்ட துடன் நட­னம், நாட­கம், எழுச்­சிப் பாடல்­கள், கவி­தை­, என்­ப­வைவும் கலைத் திறன் போட்­டி­யில் வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்­கான கேட­யங்­க­ள் வழங்கலும் இடம்பெற்றன.

நோர்வே ஒஸ்­லோ­வில் இடம் பெற்ற நிகழ்­வில் நாட­கம் உட்­பட எழுச்­சி­க­ர­மான பல கலை நிகழ்­வு­க­ளும், நியூ­சி­லாந்­தில் மவுண்ட் ரொஸ்­கில் போர் நினைவு மண்­ட­பத்­தில் இடம்­பெற்ற நிகழ்­வில் புலி கொடி­யும் அந்த நாட்­டின் தேசி­யக் கொடி­யும் ஏற்­றப்­பட்டு , பொதுச் சுடர் ஏற்­றப்­பட்டு அஞ்­சலி நிகழ்­வு­கள் இடம்­பெற்­றன. மேலும் பல்­வேறு எழுச்சி நிகழ்­வு­க­ளு­டன் 2008 ஆம் ஆண்டு மாவீ­ரர் நாள் தினத்­தன்று தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னால் நிகழ்த்­தப்­பட்ட உரை­யில் ஒரு பகுதி திரை­யில் காண்­பிக்­கப்­பட்­ட­து­டன் மாவீ­ரர்­க­ளின் போராட்ட வலி­கள், தியா­கங்­கள் குறித்து விசேட உரை­க­ளும், சிறப்­பு­ரை­க­ளும் இறு­தி­யாக தமி­ழீழ எழுச்­சிப் பாடல்­க­ளும், க­விதை நிகழ்­வு­க­ளும் இடம்பெற் றன.

ஆஸ்­தி­ரே­லியா சிட்­னி­யில் நியூ வின்­றன் மைதா­னத்­தில் இடம்­பெற்ற நிகழ்­வில் 3 ஆயி­ரத்துக்கும் மேற் பட்ட மக்­கள் பங்கு கொண்­ட­னர். சிவப்பு மஞ்­சள் கொடி அலங்­கா­ரங்­க­ளு­டன் இங்­கும் மாதிரி மாவீ­ரர் துயி­லும் இல்­லம் அமைக்­கப்­பட்டு, அஞ்­ச­லி­கள், வணக்­கப்­பா­டல், வணக்க நிகழ்­வு­கள், சிறப்­புரை என்­ப­ன­வும் இடம்­பெற்­ற­து­டன் உயிர்ப்பூ வெளி­யீட்­ட­கத்­தின் ‘காந்­தள் கரி­கா­லன்’ என்ற விடு­தலைப் போராட்ட வர­லாற்­றில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் முக்­கிய பதி­வு­க­ளைக் கொண்ட தமி­ழர் வர­லாற்று ஆவ­ணத் தொகுப்பு நூலும் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.

தமிழர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய மாவீரர் தின நிகழ்வுகள் தமி­ழர் ஒருங்­கி­ணைப்­புக் குழு­வின் ஒழுங்­க­மைப்­பு­டன் பின்­லாந்­தின் தலை­ந­கர் ஹெல்­சிங்­கில் இடம் பெற்ற நிகழ்­வில் மாவீ­ரர் நாள் அறிக்கை ஒளி­ப­ரப்­பப் பட்ட து. நோர்வே அன்னை பூப­தி­க­லைக் கூட மாண­வர்­க­ளின் பல்­வேறு கலை நிகழ்­வு­க­ளும் இடம்­பெற்­றன. டென்­மார்க்­கில் நடை­பெற்ற எழுச்சி நிகழ்­வி­லும் 2008ஆம் ஆண்டு மாவீ­ரர் தினத்­தன்று தலை­வர் பிர­பா­க­ர­னால் நிகழ்த்­தப்­பட்ட உரை வாசிக்­கப் பட்­டது. மெல்­போன் ஸ்பிரிங் வலே மண்­ட­பத்­தில் நடை­பெற்ற நிகழ்­வி­லும், பல்­வேறு நிகழ்­வு­கள் இடம் பெற்­றன.

தொப்­பிள் கொடி உற­வு­க­ளும் மாவீ­ரர்­களை உணர்­வு­பூர்­வ­மாக நினைவு கூரத் தவ­ற­வில்லை

இந்­தி­யா­வில் தமிழ் நாட்­டில் பல்­வேறு இடங்­க­ளில் அஞ்­சலி நிகழ்­வு­கள் இடம்­பெற்­ற­து­டன், தேசி­யத் தலை­வ­ரின் பிறந்த தின நிகழ்­வு­க­ளும் தமிழ்த் தேசிய விரும்­பி­க­ளி­னால் குழு­வா­க­வும் தனி­யா­க­வும் கடைப்பிடிக்கப்பட்டன, சென்னை மெரினா கடற்­க­ரை­யி­லும், புதுச் சேரி அரிய குப்­பம் பகு­தி­யில் கப்­டன் மில்­லர் அரங்­கில் கொளத்­தூர் மணி தலை­மை­யில் மாவீ­ரர்­க­ளின் புகைப்­ப­டங்­க­ளுக்கு ஈகைச் சுடர் ஏற்­றப் பட்டு மலர் அஞ்­ச­லி­யும், விசேட உரை நிகழ்­வும் இடம்பெற் றன. தஞ்­சா­வூர் முள்ளி வாய்க்­கால் நினைவு முற்­றத்­தில் உல­கத் தமி­ழர் பேர­வை­யின் தலை­வர் பழ. நெடு­மா­றன் தலை­மை­யில் அஞ்­சலி நிகழ்­வு­க­ளு­டன், தவில் நாதஸ்­வர இசைக் கச்­சே­ரி­யும் இடம்­பெற்­ற­து­.

ராமேஸ்­வ­ரத்­தில் தமி­ழக வாழ்­வு­ரி­மைக் கட்­சி­யின் ஏற்­பாட்­டி­லும், கிருஷ்­ண­கி­ரி­யி­லும் அஞ்­சலி நிகழ்­வு­கள் இடம் பெற்­றன .

மொத்­தத்­தில் உல­கில் எங்­கெல்­லாம் தமிழ் மக்­கள் வாழ்­கின்­ற­னரோ அவர்­க­ளெல்­லாம் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மேற்­கொண்ட விடு­த­லைப் போட்­டம் குறித்­தும் தாயக விடு­த­லைக்­காக கள­மாடி உயிர்­நீத்த மாவீ­ரர்­க­ளது தியா­கம் குறித்­தும் மதிப்­பும் மரி­யா­தை­யும் செலுத்த ஒரு­போ­தும் பின்­னி்ன்­ற­ தில்லை என்­பதை வர­லாற்­றுப் பதி­வு­கள் உறு­திப்­ப­டுத்தி வரு­கின்­றன.

About ஸ்ரீதா

மேலும்

சிவபூமி சிங்கள பூமியாகுமா?

ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது.