பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு மகளிர் விவகார அமைச்சரால் 9.5 லட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது!

313 0

வடமாகாண சபையின் பன்முக்கப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மகளிர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன் அவர்களால் மருதங்கேணி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட 19 பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு 9.5 லட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி பிரதேச செயலக வளாகத்தில் கடந்த செவ்வாய் கிழமைகாலை 10 மணியளவில் மருதங்கேணி பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்து அமைச்சர் அனந்திசசிதரன் அவர்கள் உரையாற்றுகையில்…

வடக்கு மாகாணத்திற்குட்பட்டு மாவட்ட ரீதியாக மகளிர் விவகார அமைச்சின் கீழான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். அதற்கு மருதங்கேணி பிரதேசசெயலரின் ஒத்துழைப்பு உண்மையில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

தன்னுடைய பிரதேசம் சார்ந்து கூடுதலான அக்கறையையும் கவனத்தையும் கொண்டுள்ளகாராணத்தினால் தான் இவ் உதவித்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது. வடமாகாணத்தில் வேறுஎங்கும் இங்கு செய்வதைப் போன்று குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தை அண்டி உதவிகள் வழங்கியதில்லை.

பிரதேச செயலராளர்களுக்குதான் கிராமமட்ட கட்டமைப்பும் தொடர்பாடலும் இருக்கின்றது. அவர்களது ஒத்துழைப்பும் ஆதரவும் இருந்தால்தான் மக்களுக்கு தேவையானஉதவிகளைச் செய்யமுடியும். வடக்கு மாகாணத்தை புறக்கணித்து மத்திய அரசு நேரடியாக உதவிகளை செய்துவருகின்றது. தேசிய நல்லிணக்கத்திற்கும் ஒருமைப்பாட்டிற்குமான அமைச்சு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு ஊடாக மத்திய அரசு உதவித்திட்டங்களை வழங்கிவருவதானது எங்களையும் மக்களையும் அந்நியப்படுத்தும் முயற்சியாகும்.

அவ்வாறு வழங்கப்படும் உதவிகள் சரியான முறையில் மக்களுக்கு கிடைத்தால்கூட பறவாயில்லை. மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட்டுவரும் நிர்வாகக் கட்டமைப்புகளின் ஊடாக அவ்வாறு மேற்கொள்ளப்படும் உதவிகள் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதனை எமக்குகிடைக்கும் முறைப்பாடுகள் மூலம் அறியமுடிகின்றது. தமது தேசியகட்சிகளின் அரசியல் லாபத்திற்காகவே இவ்வாறான நடிவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

மருதங்கேணி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தநீதிராஜ்-யாமினி மற்றும் சே.அருண்செல்வராணி ஆகியோருக்கு சிறுவியாபாரம் செய்வதற்கு தேவையான தொழில் உபகரணங்களும், சி.அன்னஈஸ்வரி, யோகேந்திரன்-வனிதா, செல்வநேசன்-சசிரேகா, மோகனதாஸ்-நேசவதனி, முருகுப்பிள்ளை-உமையாள், வேதராணியம்-வள்ளிப்பிள்ளை, செல்வராசா-தெய்வநாயகி, சிவகுருநாதன்-ஜெயராணி மற்றும் அம்புறோஸ்-செபமாலையம்மா ஆகியோருக்கு மீன்பிடி வலை உள்ளிட்ட கடற்தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, கமலநாதன்-அன்னபூரணம் மற்றும் வில்சேந்திமருசலின்-பாஸ்க்கனா ஆகியோருக்கு கோழிக் குஞ்சுகள், கோழிக் கூடு மற்றும் கோழிவளர்ப்பிற்கு தேவையான பொருட்களும், உதயகுமார்-அருந்ததி என்பவருக்கு பலகார வியாபாரம் செய்வதற்கு தேவையான ஈர அரிசி அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களும், சந்திரசேகரம்-சீதாதேவி, சுதன்-சுதாலட்சுமி மற்றும் இலட்சுமிகாந்தன்-அமுதமலர் ஆகியோருக்கு நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபரணங்களும், நடராசா-நவரத்தினம் மற்றும் சுப்பிரமணியம்-மகேஸ்வரி ஆகியோருக்கு தையல் இயந்திரங்கள் என்பனவழங்கப்பட்டுள்ளது. 

Leave a comment