சினைப்பர் ரகத்திலான துப்­பாக்கி எவ்­வாறு முஸ்லிம் நபரின் கைக­ளுக்கு கிடைத்­தது ?

401 0

சர்­வ­தேச நாடு­களின் இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தி­களின் ஆயு­தங்கள் இலங்­கைக்குள் வந்­துள்­ளன, இலங்­கையில் கைத்­துப்­பாக்­கிக்கு அனு­ம­தி­யில்­லாத நிலையில் சினைப்பர் ரகத்திலான துப்­பாக்கி எவ்­வாறு முஸ்லிம் நபரின் கைக­ளுக்கு கிடைத்­தது  என பொது­பல சேனா பெளத்த அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கேள்வி எழுப்­பினர். 

எம்மை இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­தப்­ப­டுமோ என்ற அச்சம் எழுந்­துள்ளது என்னும் அவர் குறிப்­பிட் டார்.

பொது­பல சேனா பெளத்த அமைப்பின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று இடம்­பெற்ற போது கருத்­தினை அவர் குறிப்­பிட்டார். இது குறித்து மேலும் கூறி­ய­தா­வது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளி­நாட்டில் இருந்து மிகவும் பயங்­க­ர­மான  சினைப்பர் ரக (gv15/2213) இயந்­திர துப்­பாக்கி ஒன்று கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இங்கு முஸ்லிம் நபர் ஒரு­வரே இந்த துப்­பாக்­கியை பெற்­றுள்ளார். இந்த சம்­பவம் குறித்த சகல தக­வல்­களும் எம்­மிடம் ஆதா­ரத்­துடன் உள்­ளன.

அதேபோல் குறித்த நபர், அவ­ரது அடை­யாள அட்டை இலக்கம் என்­ப­னவும் எம்­மிடம் உள்­ளன. ஆகவே பாது­காப்பு அமைச்சை தாண்டி எவ்­வாறு இந்த துப்­பாக்கி  இலங்­கைக்குள் அனு­ம­திக்­கப்­பட்­டது? இலங்­கையில் நபர் ஒரு­வ­ருக்கு சாதா­ரண கைத்­துப்­பாக்கி ஒன்றை பயன்­ப­டுத்­தவே அனு­மதி இல்­லாத நிலையில் இவ்­வா­றான மோச­மான துப்­பாக்கி எவ்­வாறு அனு­ம­திக்­கப்­பட்­டது. இந்த துப்­பாக்கி மூல­மாக வெடிச்­சத்தம் கேட்­காது சுடும் சில கரு­வி­களும் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன.

இதனை பயன்­ப­டுத்தி யாரை வேண்டும் என்­றாலும் இலக்கு வைக்க முடியும். அரச தலை­வர்­களை, அர­சியல் வாதி­களை, முக்­கிய பிர­மு­கர்­களை, வியா­பா­ரி­களை யாரையும் சுட முடியும். ஆகவே இந்த சம்­பவம் சாதா­ரண விடயம் அல்ல. எம்­மைக்­கூட இலக்கு வைக்கக்கூடும் என்ற அச்­சமும் உள்­ளது, இந்த நாட்டில் பல்­வேறு இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் உள்­ளன. நாம் இந்த நாட்டில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் குறித்து தொடர்ச்­சி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தி­ வ­ரு­கின்ற நிலையில் எம்­மைப்­போன்ற நபர்­களை கூட கொல்ல வாய்ப்­புகள் உள்­ளன.

எனவே ஜனா­தி­பதி உட­ன­டி­யாக இந்த விடயம் குறித்து கவ­னத்தில் கொள்ள வேண்டும். சாதா­ரண விட­ய­மாக இவற்றை கரு­தக்­கூ­டாது. உல­கத்தில் இன்று இடம்­பெறும் சம்­ப­வங்கள், இஸ்­லா­மிய பயங்க­ர­வாத செயற்பாடுகளின் காரணமாக இடம்பெறும் அழிவுகள் அனைத்தையும் நாம் அறிந்துள்ளோம். அவ்வாறு இருக்கையில் இலங்கையிலும் அவ்வாறான ஒரு சூழலை உருவாக்க எவரும் இடமளிக் கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment