ஆவா குழு முஸ்லிம் இளைஞனை விடுவிக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் கடும்முயற்சி !

381 0

யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவில் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் 23 வயது முஸ்லிம் இளைஞன் ஒருவன் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையையடுத்து ஆவா குழு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஆவா குழு தலைவரின் வாக்கு மூலத்தையடுத்தே இந்த முஸ்லிம் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குழுவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த இளைஞன் கைது செய்யப்பட்டது முதல் நேற்று (24) காலை வரையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் உயர் பொலிஸ் அதிகாரிகள் ஊடாக இவனை விடுவிப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் சகோதர மொழி தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.

இந்த முஸ்லிம் இளைஞன் மாத்திரமா? அல்லது இன்னும் முஸ்லிம்கள் இதனுடன் தொடர்பா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment