தம்முடன் பாதையில் இறங்குமாறு மஹி்ந்த குழுவுக்கு ஜே.வி.பி. பகிரங்க அழைப்பு

319 0

தேர்தலை பிற்போட்டு வரும் வெட்கம்கெட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றமும் தீர்வைப் பெற்றுத்தராது போனால், தாம் பாதையில் இறங்கப் போவதாகவும் தம்முடன் கூட்டு எதிர்க் கட்சியையும் ஒன்றிணையுமாறும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒருபோதும் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என நினைத்த குழுவுடனும் தாம் ஒன்றிணைந்து போாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த உரையை ஆவேஷத்துடன் நிகழ்த்தும் போது, பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செவிமடுத்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment