பொதுமக்களின் ஜனநாயக உரிமையை பறிக்க அனுமதிக்க முடியாது!

257 0
பொது மக்களின் ஜனநாயக உரிமையை வெற்றி கொள்ள செய்வதற்கு வாக்குரிமையை உறுதிப்படுத்தும் முகமாக எந்த ஒரு தீய சக்தியையும் தோற்கடிப்பதற்கு தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அந்த கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலவித குறுகிய நோக்கங்களுக்காக சிலர் பொதுமக்களின் ஜனநாயக உரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள்.

அவ்வாறான செய்யப்பாடுகளை முறியடிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி பின்வாங்காது முனைப்புடன் செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பொதுமக்களிடம் பெற்றுக்கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தோற்கடிக்கும் நோக்கில் குறுகிய அரசியல் நோக்கில் செயற்படும் எந்தவொரு தீயசக்தியையும் தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment