வேட்­பு­ ம­னுக்­கோரும் அறி­வித்­தலை 27 ஆம் திகதி விடுக்க முடி­யாது!

360 0

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்­பான வர்த்­த­மா­னிக்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இடைக்­கால தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. எனவே தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்­தலை எதிர்­வரும் 27 ஆம் திகதி விடுக்­க­மு­டி­யா­தென சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரத்­ன­ஜீவன் எச்.ஹூல் தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்தல் எதிர்­வரும் 27 ஆம் திகதி வெளி­யி­டப்­படும் என சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு கடந்த வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்திருந்தது. இதே­வேளை உள்­ளூ­ரட்சி மன்றத் தேர்தல் தொடர்­பான வர்த்­த­மா­னிக்கு மேற்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் நேற்று இடைக்­கால தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

எனவே அது தொடர்பில் சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரத்­ன­ஜீவன் எச்.ஹூலிடம் வின­வி­ய­போதே அவர் இதைனத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு எதி­ராக கடந்த 15 ஆம் திகதி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் ரீட்­ம­னு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அவ்­வ­ழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது குறித்த வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு இடைக்­கால தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே எதிர்­வரும் 27 ஆம் திகதி உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்­தலை விடுக்­க­மு­டி­யாது. எனவே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் விவ­காரம் தொடர்பில் சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு எதிர்­வரும் சனிக்­கி­ழமை கூடி ஆரா­ய­வுள்­ள­தா­கவும் அவர் மேலும்  தெரி­வித்தார்.

இதே­வேளை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்தல் எதிர்­வரும் 27 ஆம் திகதி விடுக்­கப்­படும் என தீர்­மா­னித்­த­தற்­கி­ணங்க எதிர்­வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்­பகல் வரையில் வேட்பு மனுக்­களை பொறுப்­பேற்­ப­தற்கு  சுயாதீன தேர்­தல்கள் ஆணைக்­குழு ஏற்­க­னவே தீர்­மா­னித்­தி­ருந்­தது.

எனவே எதிர்­வரும்  ஜன­வரி மாதத்தில் தேர்தல் நடை­பெறும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் தற்­போது உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்­பான வர்த்­த­மா­னிக்கு இடைக்­கால தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளதால் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மேலும் காலம் தாழ்த்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இதே­வேளை உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்து இரு வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில், எல்லை நிர்­ணயம் உள்­ளிட்ட கார­ணங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தேரதல் காலம் தாழ்த்­தப்­பட்டு வந்­தது.

எனினும் அதற்­கான பணிகள் நிறை­வு­செய்­யப்­பட்­ட­துடன் கடந்த முதலாம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானியில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா கைச்சாத்திட்டு அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்தார். அவ்வர்த்தமானி கடந்த 11 ஆம் திகதியே வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment