ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் 350 மில். டொலர் கடன்!

328 0

நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இரண்டு கடன் ஒப்பந்தங்களில் இன்று (22) கைச்சாத்திட்டுள்ளது. இவ்விரு ஒப்பந்தங்களின் மூலம் மொத்தமாக 350 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்கு கடனாக கிடைக்கவுள்ளது.

இக்கடனுதவியின் மூலம் கிடைக்கப் பெறவுள்ள நிதியில் 200 மில்லியன் டொலர்கள் கிராமப்புற வீதி அபிவிருத்திப் பணிகளுக்குச் செலவிடப்படவுள்ளன. இதன்மூலம் மொத்தமாக 3,400 கிலோ மீற்றர் நீளத்துக்கு வீதிகள் அமைக்கப்படவுள்ளன.

இதில் 340 கிலோமீற்றர் நீளமுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளும் அடங்கும். மேலும், இவ்வீதிகள் எல்லா காலநிலைக்கும் பொருந்தக்கூடிய வகையிலேயே அமைக்கப்படவுள்ளன.

எஞ்சியுள்ள 150 மில்லியன் டொலர்கள் மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் சக்தி நிலையம் ஒன்றுக்காகச் செலவிடப்படவுள்ளது. இவ்வாலை மூலம் சுமார் 100 மெகாவோட் மின்சாரம் பிறப்பிக்கப்படும் என்று தெரியவருகிறது.

Leave a comment